தேவையான பொருள்கள்:
- நல்லெண்ணெய்.
- வேப்பெண்ணெய்.
- கடுகு எண்ணெய்.
- நீரடிமுத்துக்கொட்டை எண்ணெய்.
- தேங்காய் எண்ணெய்.
- சுக்கு.
- மிளகு.
- இலுப்பை கொட்டை.
- அருகம்புல்.
- நொச்சி இலை.
செய்முறை:
- 200 மி.லி நல்லெண்ணெயை ஒரு பானையில் ஊற்றி சிறிது சூடேறியதும் 200 மி.லி வேப்பெண்ணெயை ஊற்றி சிறிது சூடேற்றி பிறகு 200 மி.லி கடுகு எண்ணெயை ஊற்றி 1 நிமிடம் சூடேற்றி நீரடி 200 மி.லி முத்துக்கொட்டை எண்ணெயை ஊற்றி 2 நிமிடம் சூடேற்றி பின்பு 200 மி.லி தேங்காய் எண்ணெய் ஊற்றி 3 நிமிடங்கள் சூடேற்றி இறக்கி விடவும்.
- 50 கிராம் சுக்கையும், 50 கிராம் மிளகையும் நன்றாக இடித்து கொள்ளவும். 100 கிராம் இலுப்பை கொட்டையை பச்சையாக கொண்டு வந்து இடித்து கொள்ளவும்.
- 100 கிராம் அருகம்புல்லையும், 100 கிராம் நொச்சி இலைகளையும் பச்சையாக கொண்டு வந்து சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். பிறகு அனைத்தையும் தைல பானையில் போட்டு மீண்டும் சிறு தீயில் வைத்து சூடேற்றவும்.
தைல பதத்தில் வரும் போது இறக்கி வடிகட்டி தைலத்தை கண்ணாடி பாத்திரத்தில் பத்திரப்படுத்தவும்.
உபயோகிக்கும் முறை:
- உடம்பில் வலியுள்ள இடத்தில் இந்த தைலத்தை பலமுறை நன்றாக தடவி அரப்பு தேய்த்து வெந்நீரில் கழுவவும். ஒரு நாளைக்கு 2 முறை பயன்படுத்தலாம்.