பல் / வைத்தியம் · December 12, 2012

பற்பொடி

தேவையான பொருட்கள்:

  1. சீமைக் கல்நார்-500 கிராம்
  2. வேப்பம் பட்டை100கிராம்
  3. கருவேலம் பட்டை-100கிராம்
  4. ஆலம் விழுது-50 கிராம்
  5. கடுக்காய் தோல்-50 கிராம்
  6. கிராம்பு-50 கிராம்
  7. களிப்பாக்கு-50 கிராம்
  8. படிகாரம்-50 கிராம்
  9.  உப்பு-50 கிராம்
  10. எலுமிச்சை.

செய்முறை:

  • சீமைக் கல்நாரை ஒரு மண் சட்டியில் போட்டு 50 கிராம் சோற்று உப்பை 4 லிட்டர் நீரில் கரைத்து அதில் ஊற்றி 3 நாட்கள் மூடி வைத்து கல்நாரைக் கழுவி உப்பு நீரை நீக்கி அதில் 250 மி.லிட்டர் எலுமிச்சம் பழச்சாற்றில் 750 மி.லிட்டர் தூய நீர் கலந்து ஊற்றி கல்நாரைப் போட்டு 2 நாள் கழித்து கல்நாரை எடுத்து தூய நீரில் கழுவி உலர விட்டு மாப்போல இடித்துக் கொள்ளவும்.
  • வேப்பம் பட்டை, கருவேலம் பட்டை, ஆலம் விழுது, கடுக்காய்த் தோல், கிராம்பு, களிப்பாக்கு இவைகளையும் இடித்து வடிகட்டி கல்நாருடன் சேர்க்கவேண்டும். படிகாரத்தையும் இடித்துப் போட்டு கடைசியாக சோற்று உப்பை மண் சட்டியில் வறுத்து இடித்துப் போட்டு நன்றாகக் கலந்து 3 நாட்கள் மூடி வைத்திருந்து பின்பு பயன்படுத்த வேண்டும்.

தீரும் நோய்கள்:

  • பல் வலி, பூச்சி, பல் கூச்சம், வாய் நாற்றம், பல் அரணை, சீழ் வடிதல், ஈறு வடிதல், ஈறு தடித்தல், பல் துட்டம் நீங்கும், பல் சுத்தமாகும் ஆகிய நோய்கள் குறையும். பற்கள் பலமாகும்.

 

Show Buttons
Hide Buttons