தேவையான பொருள்கள்:
- சுக்கு = 200 கிராம்
- மிளகு = 25 கிராம்
- திப்பிலி = 25 கிராம்
- அதிமதுரம்= 25 கிராம்
- கருஞ்சீரகம் = 25 கிராம்
- ஏலக்காய் = 25 கிராம்
- கிராம்பு = 25 கிராம்
- கடுக்காய் தோல் = 25 கிராம்
- சீரகம் = 25 கிராம்
செய்முறை:
- சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். மிளகு, திப்பிலி, கருஞ்சீரகம் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றிரண்டாக தட்டி மண் பாத்திரத்தில் இளம் வறுவலாக வறுத்து இடித்து கொள்ளவும்.
- அதிமதுரத்தை ஒன்றிரண்டாக தட்டி ஒரு மண் பாத்திரத்தில் போட்டு 200 மி.லி பசும்பாலை ஊற்றி கொதிக்க வைத்து எடுத்து மண் தட்டால் மூடி 3 மணி நேரம் கழித்து அதிமதுரத்தை எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.
- கிராம்பை பூ நீக்கி இடித்து கொள்ளவும். சீரகத்தை இடித்து கொள்ளவும்.
- கடுக்காய் தோலை ஒரு மண் பாத்திரத்தில் போட்டு 200 மி.லி புழுங்கலரிசி கொதி நீரை விட்டு மூடி 3 மணி நேரம் வைத்திருந்து எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.
இடித்து வைத்த எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு நன்றாக இடித்து சலித்து ஒரு மண் பானையில் போடவும். 500 மி.லி தேனை சிறிது சூடு செய்து கொண்டு மரக்கரண்டியால் சிறிது சிறிதாக ஊற்றி கிளறி விட்டு இலேகியம் பதம் வந்ததும் மண் தட்டால் மூடி 3 நாட்கள் வைத்திருந்து எடுத்து பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
உபயோகிக்கும் முறை:
- காலை உணவுக்கு முன்னும், மாலை 6 மணி அளவிலும் ஒவ்வொறு தேக்கரண்டி மருந்துடன் சிறிது வெந்நீர் குடித்து வரவும். இவ்வாறு 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறைந்து சரியாக பசி எடுக்கும்.