வல்லாரை இலையைக் காயவைத்து அரை கிலோ அளவில் எடுத்துக்கொள்ளவும். இத்துடன் 50 கிராம் சீரகம், ஐந்து கிராம் மஞ்சள் சேர்த்துத் தூள் செய்து சலித்து வைத்துக் கொள்ளவும். இதில் காலை, மாலை உணவுக்கு பின்பு இரண்டு கிராம் அளவில் சாப்பிட்டு, சூடான பசும்பால் அருந்தி வர, நினைவாற்றல் பெருகும்.