தேவையான பொருள்கள்:
- சிவகரந்தை இலை = 25 கிராம்
- ஓமம் = 25 கிராம்
- திப்பிலி = 100 கிராம்
- சுக்கு = 50 கிராம்
செய்முறை:
சிவகரந்தை இலைகளை பச்சையாக கொண்டு வந்து நிழலில் உலர்த்தி கொள்ளவும். திப்பிலியை சுத்தம் செய்து கொள்ளவும். சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். ஓமத்தை இளம் வறுவலாக வறுத்து கொள்ளவும். எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து இடித்து சலித்து கொள்ளவும்.
உபயோகிக்கும் முறை:
- இந்த சூரணத்தை காலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வெந்நீர் குடித்து வரவும். மாலை அரைத்தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வெந்நீர் குடித்து வர வேண்டும். இவ்வாறு 14 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஜீரணக்குறைவு குறையும்.