குழந்தைக்குத் தலை மயிர்க்கால்களுக்குள் சிறு நமைச்சல் கொப்புளங்களாக உண்டாகி சினைத்து அதிலிருக்கும் நீர் வியர்வையுடன் கலந்து தலை முழுவதும் பரவி பெரும் புண்ணாகி விடும். முடி ஒன்றோடு ஒன்று சேர்ந்து துர்நாற்றம் அடிக்கும். சில சமயங்களில் முகம், உடல் முழுவதும் பரவி விடும்.
கபாலக் கரப்பானுக்கு சிகிச்சை செய்யும் முன் முடியை வெட்டி விட வேண்டும்.
மருந்து
பாவட்டை இலை – 75 கிராம்
இலுப்பைப் பட்டை – 75 கிராம்
வெங்காயம் – 75 கிராம்
வசம்பு – 75 கிராம்
சிற்றாமணக்கு எண்ணெய் – 1/2 லிட்டர்
இவற்றை ஒன்று சேர்த்து காய்ச்சி வடித்துக் காலை மாலை ஒரு தேக்கரண்டி வீதம் கொடுக்க வேண்டும்.
இரவில் சிற்றாமணக்கு இலையை வதக்கி புண்களில் வைத்து கட்டி காலையில் கட்டை அவிழ்த்து சுட்ட இலுப்பை அரப்பினால் சுத்தமாக தேய்த்துக் கழுவி தேங்காய் எண்ணெயில் தடவி வர வேண்டும்.