சீரகத்தைச் சுத்தம் செய்து, சிறிது நெய் சேர்த்து வறுத்துக் கொள்ளவேண்டும். இஞ்சியைத் தோல் சீவி வட்டமாக நறுக்கி, நெய் விட்டு, ஈரம் போக வறுக்கவேண்டும். சீரகத்தை நன்றாக இடித்து, சலித்து, வறுத்த இஞ்சியையும் இடித்து, சலித்து, வெல்லத்தைப் பொடித்து, எல்லாம் ஒன்று கலந்து வைத்துக் கொள்ளவேண்டும்.