இயற்கையாகவே கூந்தலை வலமாக – செழுமையாக – பளபளப்பாக வைத்து கொள்ள உணவில் நல்ல சத்துக்கள் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.அன்றாடம் தேங்காய் எண்ணெய்யை தலைக்கு தடவி வர வேண்டும்.வகை வகையான வாசனை தைலங்களை உபயோகிப்பதால் முடி உதிர்தல், தலை சொட்டையாதல் போன்ற குறைபாடுகள் தோன்றக் கூடும். தலைக்கு எண்ணெய் தடவும் போது தலை முடியினுள் விரல்களை நன்றாக செருகி அழுத்தி பிடித்து கோத்த வேண்டும். முதலில் உச்சந்தலையில் எண்ணெய் வைத்து உள்ளங்கையால் அழுத்தி தேக்க வேண்டும்.