முடக்கற்றான் (Wintercherry)
உடல் வலி குறைய
முடக்கற்றான் இலைகளை நறுக்கி அரிசி மாவுடன் சேர்த்து அடை செய்து சாப்பிட்டு வந்தால் உடல் வலி குறையும்.
இடுப்பு வலி குறைய
முடக்கற்றான் இலைகளை பருப்பு, வெங்காயம், சேர்த்து வதக்கி சாப்பிட இடுப்பு வலி குறையும்.
மூட்டு வலி குறைய
முடக்கற்றான் இலைகளை எடுத்து நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறையும்.
மூட்டு வலி குறைய
குப்பைக் கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் மூட்டு வலி குறையும்.
மூட்டு வலி குறைய
பிரண்டை இலை, முடக்கத்தான் இலை, சீரகம் மூன்றையும் தலா 10 கிராம் அளவு எடுத்து அரைத்து காலையில் சாப்பிட்டால் மூட்டு வலி,...
மூட்டு வீக்கம் குறைய
கடுகுரோகிணி, ஆதண்டை வேர், சங்கன் வேர், புங்கன் வேர் ஆகியவற்றை இடித்துப் பொடி செய்துக் கொள்ள வேண்டும். முடக்கொத்தான் சாறு, வெங்காயச்...
வாத வலிகள் குறைய
பரட்டைக் கீரை, முடக்கத்தான் கீரை, வாதநாராயணன் கீரை மூன்றையும் சிறிது பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் வாதத்தால் ஏற்படும் வலிகள் குறையும்.
வாதபிடிப்பு குறைய
முடக்கத்தான் இலைகளை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி அதை அரிசிமாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட்டு வந்தால் வாதபிடிப்பு குறையும்.