நீர் எரிச்சல் குறைய
செம்பருத்திஇலையை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி கற்கண்டு சேர்த்து பருகி வர நீர் எரிச்சல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
செம்பருத்திஇலையை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி கற்கண்டு சேர்த்து பருகி வர நீர் எரிச்சல் குறையும்.
முள்ளங்கிச் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் அளவு குடிக்க சிறுநீர் எரிச்சல் குறையும்.
முருங்கைக் கீரையும்,வெள்ளரி விதையும் எடுத்து நன்கு அரைத்து வயிறு முழுவதுமாக பூசிவிட நீர்க்கட்டு உடைந்து சிறுநீரக எரிச்சல் குறையும்.
செம்பருத்தி இலைகளை, அரைத்துப் பசும்பாலில் இட்டு கலந்து, குடிக்க சிறுநீர் எரிச்சல் குறையும்.
புதினா இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, தேன், எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர சிறுநீர் எரிச்சல் குறையும்.
தொட்டால் சிணுங்கி இலையை அரைத்து 10 கிராம் எடுத்து, காலையில் தயிருடன் கலந்து சாப்பிட சிறுநீர் எரிச்சல் குறையும்.
பொடுதலைக் கீரையுடன் சிறிது சீரகம், பார்லி சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீர்க்கடுப்பு, எரிச்சல் நீங்கி, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
கானாம்வாழைக் கீரையை அரைத்துச் சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் குறையும்.