பஜ்ஜி சுவை அதிகமாக
பஜ்ஜி மாவுடன் புதினா அல்லது அரைக்கீரை போன்ற ஏதாவது ஒரு கீரையை சேர்த்து சுட்டால் சுவையாக இருக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
பஜ்ஜி மாவுடன் புதினா அல்லது அரைக்கீரை போன்ற ஏதாவது ஒரு கீரையை சேர்த்து சுட்டால் சுவையாக இருக்கும்.
அரைக்கீரையை நன்கு சுத்தம் செய்து நெய்விட்டு சமைத்து சாப்பிட்டு வந்தால் சளியினால் ஏற்படும் காய்ச்சல் குறையும்.
அரைக் கீரையுடன் பூண்டு, மிளகும் தக்க அளவு சேர்த்து குழம்பு வைத்து சாப்பிடடால் உடல் வலி குறையும் .
சிறிதளவு அரைக்கீரையை எடுத்து சாப்பிடும் உணவில் வாரத்தில் 2 முறை சேர்த்து கொண்டால் கண்கள் குளிர்ச்சி பெறுவதுடன் உடல் வலிமையும் பெறும்.
அரைக்கீரையுடன் சுக்கு, இஞ்சி, மிளகு, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் குளிர் காய்ச்சல் குறையும்.
அரைக்கீரையுடன், சிறுபருப்பு, மிளகு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து சாதத்தில் கலந்து காய்ச்சல் உள்ளவருக்கு கொடுத்தால், காய்ச்சல் குறையும்
அரைக்கீரை சாறில் ஒரு கிராம் ஏலரிசியை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும்.
சூடான சாதத்தில் அரைக்கீரையை துவரம் பருப்புடன் நெய் சேர்த்து தினமும் சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி குணமாகும்.