பல்வலி குணமாக
படிகாரத்தையும், கடுக்காயையும் பொடி செய்து நீரில் கலந்து தினமும் வாய் கொப்பளித்து வர குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
படிகாரத்தையும், கடுக்காயையும் பொடி செய்து நீரில் கலந்து தினமும் வாய் கொப்பளித்து வர குணமாகும்.
கருவேலப்பட்டையை காய வைத்து பொடியாக்கி தினமும் காலையில் பல் துலக்கி வந்தால் பல் வலி குணமாகும்.
துவர்ப்பாக்கு, நெல்லி வற்றல், கிராம்பு இவற்றை பொடி செய்து தினமும் பல் துலக்கி வர பல் வலி குறையும்.
ஒரு கரண்டி மிளகுடன் 2 கரண்டி சர்க்கரையைச் சேர்த்து நன்றாக அரைத்து பல் வலியுள்ள இடத்தில் வைத்தால் வலி தீரும்.
புளியங்கொட்டை தோல் பொடி, கருவேலம் பட்டை பொடி, உப்பு கலந்து பல் துலக்கி வர பல்வலி குறையும்.
உப்பு, எலுமிச்சைச் சாறு, பெருங்காயம் மூன்றையும் கலந்து தினமும் பல் துலக்கி வர பல் வலி குறையும்.