கைகால் வீக்கம் குணமாக
வேலிப்பருத்தி சாற்றை சுண்ணாம்பு கலந்து வீக்கங்களில் தடவி வர குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
வேலிப்பருத்தி சாற்றை சுண்ணாம்பு கலந்து வீக்கங்களில் தடவி வர குணமாகும்.
சுக்காங்கீரையை பருப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் உருவாகும் பித்த ஊறல் மற்றும் தழும்புகள் மறையும்.
வில்வ இலைகளை நீர்விட்டுக் காய்ச்சி அந்த நீரைக் குடித்து வந்தால் வாதக்காய்ச்சல் குணமாகும்.
அமுக்கிரான்கிழங்கை மை போல் அரைத்து வீக்கத்தின் மேல் போட்டு வந்தால் வீக்கம் குறையும்.
வேலிப்பருத்தி இலையை வேப்பெண்ணெயில் வதக்கி வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கீல்வாத நோய் குணமாகும்.
தினமும் அதிகாலையில் மட்டும் வேப்ப மரத்தின் தளிர் இலைகளை பாக்களவு உண்டு வர சகல பித்தமும் குறைந்து பித்தமயக்கம் உண்டாகும்.
கல்தாமரை இலையை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் மூளை பலவீனக் குறைவு சரியாகும்.
எலுமிச்சை இலையை மோரில் ஊற வைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.