தொண்டை
தொண்டைவலி குறைய
ஐந்து துளி விளக்கெண்ணெயுடன் சிறிதளவு சுண்ணாம்பு கலந்து சூடு செய்து பொறுக்கும் பதத்தில் கழுத்தில் தடவினால் தொண்டை வலி குறையும்.
தொண்டைவலி குறைய
சீத்தாப்பழ இலைகளை காய வைத்து பொடியாக்கி 1 கிராம் அளவு பொடியை சூடான பால் கலந்து குடித்தால் தொண்டைவலி குறையும்.
தொண்டை வறட்சி
கற்பூரவல்லிச் சாற்றில் கற்கண்டுத் தூள் தேவையான அளவு சேர்த்து சாப்பிட்டு வர தொண்டை வறட்சி குறையும்.
தொண்டைப் புண் குறைய
வேப்பிலை கஷாயத்துடன், சிறிதளவு தேன் கலந்து பருகி வர, தொண்டைப் புண் குறையும்.
தொண்டைவலி குறைய
எலுமிச்சை இலைகளை, நீர்லிட்டுக் காய்ச்சி வாய் கொப்பளிக்க தொண்டைவலி குறையும்.
சளி காய்ச்சல் குறைய
கண்டங்கத்திரி வேர், சுக்கு, மிளகு, கொத்தமல்லி, சீரகம் சேர்த்து கஷாயம் போட்டு குடித்தால் சளி காய்ச்சல் குறையும்.
தொண்டை வலி குறைய
பெருவிலை இலைகளை நீரில் ஊறவைத்து ஊறிய நீரில் வாய் கொப்பளிக்க தொண்டை வலி குறையும்.
சளித்தொல்லை குறைய
முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது...