ஜலதோஷம் குறைய
வெற்றிலைச்சாறு எடுத்து அதனுடன் சுக்கு மிளகு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட ஜலதோஷம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
வெற்றிலைச்சாறு எடுத்து அதனுடன் சுக்கு மிளகு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட ஜலதோஷம் குறையும்.
மஞ்சள் பொடியை எடுத்து அதில் தண்ணீர் விட்டு நன்றாகக் காய்ச்சி சிறிதளவு சர்க்கரைச் சேர்த்து சாப்பிட ஜலதோஷம் குறையும்.
அரைக்கீரையுடன் மிளகு பொடி சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டு வர ஜலதோஷம் குறையும்.
வில்வமர இலையை சாறு எடுத்து வெந்நீர் அல்லது தேன் சேர்த்து பருகி வந்தால் சளி, ஜலதோஷம் குறையும்.
நல்ல மிளகு இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி வடிகட்டி ஒரு அவுன்சு குடித்து வந்தால் தலைக்கனம் மற்றும் ஜலதோஷம் குறையும்.
கற்பூரவல்லி இலைகளை பிழிந்து சாறு எடுத்து அரைக்கரண்டி வீதம் மூன்று வேளை குடித்து வந்தால் ஜலதோஷம், சளி குறையும்.
துளசி இலை மற்றும் கற்பூரவல்லி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அவித்து அதன் சாற்றைப் பிழிந்து ஒரு வேளைக்கு 10...