தலைமுடி
புழுவெட்டு நீங்கி முடி வளர
ஆற்று தும்மட்டியை நறுக்கி தேய்த்து வந்தால் புழுவெட்டு நீங்கி முடி வளரும்.
முடி உதிர்வதுக் குறைய
வெந்தயம், குன்றிமணி ஆகியவற்றை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தலைக்கு தேய்த்து வந்தால்...
முடி கருமையாக வளர
காய்ந்த நெல்லிக்காயை பொடி செய்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வரலாம்.
தலைமுடி உதிரவதுக் குறைய
கோபுரந்தாங்கி இலைச்சாறை நல்லெண்ணெயில் காய்ச்சி தலைமுழுகினால் தலை முடி உதிராது.
செம்பட்டை முடி கறுக்க
நில ஆவாரை இலையுடன் மருதோன்றி இலை சேர்த்து அரைத்து தேய்க்க பலன் கிடைக்கும்.
செம்பட்டை முடி நிறம் மாற
மரிக்கொழுந்து இலையையும், நிலஆவாரை இலையையும் சம அளவு எடுத்து மைய அரைத்து தலைக்கு தடவி வந்தால் சிலநாட்களில் நிறம் மாறும்.
முடி நன்றாக வளர
கேரட் சாறு , எலுமிச்சை சாறு ஆகியவற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தேய்த்து வந்தால் முடி நன்றாக வளரும்.
முடி அடர்த்தியாகவும், நீண்டும் வளர
சடாமஞ்சில்லை நல்லெண்ணெயில் காய்ச்சி வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்துவரவும்.