தலைவலி குறைய
எலுமிச்சை, திராட்சை, முருங்கை, புதினா, துளசி, கேரட், பேரீச்சம்பழம், தேன், ஆரஞ்சு, மாதுளைமாதுளம்பழம், பூண்டு, வெங்காயம் இவைகளை சாறு எடுத்து குடித்திட...
வாழ்வியல் வழிகாட்டி
எலுமிச்சை, திராட்சை, முருங்கை, புதினா, துளசி, கேரட், பேரீச்சம்பழம், தேன், ஆரஞ்சு, மாதுளைமாதுளம்பழம், பூண்டு, வெங்காயம் இவைகளை சாறு எடுத்து குடித்திட...
புளியாரைக்கீரைகளுடன் பூண்டு சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பூசினால் தலைவலி குறையும்
பசலை கீரை இலையை அரைத்து நெற்றியில் பற்று போட்டால் சூட்டினால் உண்டான தலைவலி குறையும்
புதினா இலைகளை இடித்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால் தலைவலி குறையும்.
பருப்புக் கீரை இலைகளை அரைத்து சாறு எடுத்து நெற்றியில் பூசி வந்தால் தலைவலி குறையும்
துலுக்க சாமந்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால் தலைவலி குறையும்
கொடிப்பசலைக் கீரையை நீரில் போட்டு அலசினால் கொழகொழப்பான திரவம் கிடைக்கும். இதை தலை, நெற்றியில் தடவ தலைவலி குறையும்.
மணத்தக்காளி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால் தலைவலி குறையும்.