500 கிராம் 50 வருட பழைய வேப்பம் பட்டையை தூய நீரில் கழுவி நிழலில் உலர்த்தி ஒரு மண் சட்டியில் போட்டு 1 லிட்டர் (கறந்தவுடன்) பசும்பாலை ஊற்றி 3 மணி நேரம் மூடி வைத்திருந்து பால் சுண்டும் அளவுக்கு அவித்து நிழலில் உலர்த்தி இடித்து வடிகட்டிக் கொள்ளவும். 5 கிராம் தூளில் 3 அரிசி எடை காந்த செந்தூரத்தைக் கலந்து வெந்நீரில் காலை, மாலை என 2 வேளை வீதம் 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய்கள் குறையும்.