திப்பிலி, கடுகுரோகிணி, ஏலக்காய், சீரகம், கிராம்பு ஆகியவற்றை வறுத்து இடித்துப் பொடி செய்து சலித்துக் கொள்ளவேண்டும். இதனுடன் மயிலிறகு சாம்பலையும் சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவேண்டும். இந்த பொடியை ஐந்து கிராம் எடுத்து தேனில் குழைத்து தினசரி சாப்பிட்டு வந்தால் விக்கல் குறையும்.