படை நோய்கள் குறைய

தேவையான பொருட்கள்:

  1. மிருதார் சிங்கி – 50 கிராம்
  2. நெல்லிக்காய் – 50 கிராம்
  3. கற்பூரம் – 50 கிராம்
  4. மயில் துத்தம் – 50 கிராம்
  5. ரசம் – 50 கிராம்
  6. இளநீர்.
  7. வெற்றிலை.

செய்முறை:
மருந்துகளை கல் உரலில் போட்டு நன்கு இடித்து கொள்ளவேண்டும். இடித்த மருந்தை ஒரு மண் சட்டியில் போட்டு ஒரு லிட்டர் இளநீர் விட்டு 12 மணி நேரம் மூடி வைத்திருந்து, சட்டியை அடுப்பில் வைத்து  இளநீர் சுண்டும் அளவுக்கு சிறு தீயாக எரித்து மருந்தை தூய நீரில் கழுவி ஒரு மணி நேரம் வெயிலில் காய வைத்துக் கொள்ளவேண்டும். இரண்டு கிலோ கற்பூர வெற்றிலையை கல் உரலில் போட்டு 500 மி.லிட்டர் சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். மருந்தை கல்வகத்தில் போட்டு சாற்றை சிறுக சிறுக விட்டு சாறு தீரும் வரை அரைத்து இருக்கும் பதத்தில் விரல் கனத்தில் திரட்டிக் கொள்ளவும்.
உபயோகிக்கும் முறை:
படையுள்ள இடத்தில் எலுமிச்சை பழச்சாற்றில் 20 நாட்கள் உரைத்துப் போடவேண்டும்.

Show Buttons
Hide Buttons