எள்ளுப்புண்ணாக்கு ஒருக்கைப்பிடி அளவு, கருப்பட்டி ஒரு கைப்பிடி அளவு இரண்டையும் தனித்தனியாக தூள் செய்து ஒன்றைக் கலந்து அதற்கு சமமாக நல்லெண்ணெய்யை ஊற்றி உரலில் இடிக்கவும். பின்பு ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டை செய்து கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்தவும்.தினமும் காலை, மாலை இரு வேளை ஒரு உருண்டையை மென்று சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் வலி, நீரிழிவு நோய், அதிகமாக சிறுநீர் பிரிதல் முதலானவை குணமாகும். ஆனால் இம்மருந்தை 2 மண்டலம் அளவு அதாவது 90 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.