சோற்றுக் கற்றாழையின் மடல் 7 முறை அலசி எடுத்தது அரை கிலோ, சிற்றாமணக்கு எண்ணெய் 1 கிலோ, இரண்டையும் சேர்த்து பதமாகக் காய்ச்சி எடுத்து, அத்துடன் வெள்ளை வெங்காயச் சாறு 100 கிராம் பனங்கற்கண்டு அரை கிலோ இடித்துப் போட்டு நன்றாகப் பிசைந்து குழம்பாக்கி, சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து மீண்டும் இலேசான சூடு ஏற்றி கிளறிக் கொண்டே வந்தால் பாகு பதம் வரும். அப்போது இறக்கி வைக்கவும். பெரியவர்களுக்கு 10 கிராம் அளவிலும், 12 வயது வரை உள்ள சிறியவர்களுக்கு 5 கிராம் அளவிலும் 2 வேளை கொடுத்து வந்தால் அடிபட்ட இடத்தில் இரத்தக்கட்டு இருப்பது குறையும்.