மாந்தத்தின் அறிகுறிகள்

குழந்தை பிறந்தது முதல் மூன்று மாதம் மட்டும் தான் இந்நோய் ஏற்படும். முதலில் காய்ச்சல் 101, 102 டிகிரி இருக்கும்.

குழந்தையின் தொண்டை புண்பட்ட மாதிரி சிவந்து வீங்கி இருக்கும். வாயின் உள்பாகத்தில் வெளிறின பச்சை நிறமான தடிப்புகள் உண்டாகும். அதனால் பால் குடிக்காது.

சுரத்துடன் வியர்வை காணும். வாந்தி வயிற்றோட்டம் ஏற்படும். சில சமயம் மலத்துடன் சீதம் கலந்தும் , சில சமயம் மலம் தண்ணீராயும், பால் போலவும் , நுரையாகவும் இருக்கும்.
நாக்கு வறண்டும், தொண்டை கட்டியும் இருக்கும். கண் குழி விழும் . கை, கால் குளிரும். வாய் நாற்றம் அடிக்கும். விழி சுற்றிக் கொண்டே இருக்கும்.கால்கள் பின்னி சோர்ந்து போகும்.

Show Buttons
Hide Buttons