பச்சிலைச் சாறு போலக் கழிச்சல்

குழந்தை, பச்சிலையைக் கசக்கிப் பிழிந்த சாறு போலவே கழியும். மலம் தண்ணீராகவும், பச்சையாகவும் , நுரை கலந்தும் போகும். மலம் கழியும்போது சப்தம் உண்டாகும். தோஷரோகத்திலும், கணைரோகத்திலும் இந்த நோய் உண்டாகும்.

மருந்து

அதிமதுரம் – 10 கிராம்
ஏலக்காய் – 10 கிராம்
சகஸ்திரபேதி – 10 கிராம்

ஒன்று சேர்த்து ஒரு கோப்பை பழையசாதத்தின் நீர் விட்டு அரைத்து கலக்கிக் காலை, மாலை ஒரு அவுன்சு வீதம் கொடுக்க குணமாகும்.

Show Buttons
Hide Buttons