உள்காய்ச்சல்

குழந்தைக்கு சுரம் வெளியே தெரியாமல் உள்ளுக்குள் அதிகமாக இருக்கும். உதடு வறண்டு நாவறட்சி ஏற்படும்.கண் எரியும். ஆயாசம் உண்டாகும். சிறுநீர் சூடாக இறங்கும். மலச்சிக்கல் ஏற்படும். தொண்டைப் புகைச்சல் இருக்கும்.

மருந்து

சிறுவழுதலை – 1 5க்ரம்
பெருவழுதலை – 15 கிராம்
தேவதாரு – 15 கிராம்
சுக்கு -15 கிராம்
கொத்தமல்லி – 15 கிராம்
கடுக்காய் – 15 கிராம்

இவற்றை ஒன்றாகத் தட்டி ஒரு லிட்டர் நீரிலிட்டு 1/8 லிட்டராகச் சுண்டக்காய்ச்சிய கசாயத்தில் ஒரு அவுன்சு வீதம் தினசரி 3 வேளை கொடுக்க குணமாகும்.

 

Show Buttons
Hide Buttons