ஆமச் சுரம்

குழந்தைக்கு பகலில் சுரம் அதிகமாக இருக்கும். நடுக்கம் இருக்கும். தலைவலி, உடம்பு வலியினால் அழும். கை கால் குளிர்ந்திருக்கும். சீறி சீறி குழந்தை அழுதுகொண்டே இருக்கும்.

மருந்து

வசம்பு – 15 கிராம்
ஓமம் – 15 கிராம்
மிளகு – 15 கிராம்
சுக்கு – 15 கிராம்
திப்பிலி – 15 கிராம்
வெள்ளைப்பூண்டு – 15 கிராம்
ஆமையோடு – 15 கிராம்
சங்கம வேர் – 50 கிராம்
தூதுவளை வேர் – 50 கிராம்
வேலிப்பருத்தி வேர் – 50 கிராம்
பொன்னாங்கண்ணி வேர் – 50 கிராம்
பொடுதலை – 15 கிராம்

வேர்களையும், பொடுதலையையும் நையத் தட்டி இரண்டு லிட்டர் நீரில் போடவும். வசம்பு முதல் ஆமையோடு வரையுள்ள எல்லாவற்றையும் ஒரு வெள்ளைத் துணியில் முடிந்து போட்டு, 1/8 லிட்டராகும் வரைக் காய்ச்சவும். பின்பு துணியில் முடிந்திருப்பவைகளை மை போல அரைத்து கசாயத்துடன் கலக்கவும். இதில் வேளைக்கு அரை முதல் ஒரு அவுன்சு வரை கொடுத்து வரக் குணமாகும்.

உப்பு, புளி, கடுகு தள்ளுபடி பத்தியம்.

Show Buttons
Hide Buttons