அஸ்தி சுரம்

குழந்தைக்கு எலும்புகளில் அனல் ஏற்ப்படுவதினால் அஸ்தி சுரம் உண்டாகிறது. சுரம் அதிகமாகக் காணும். வெண்மையான வாந்தியுண்டாகும். இருமலிருக்கும். நாளாக உடல் வெளுத்து ஆயாசமுண்டாகும்.

மருந்து

அதிமதுரம் – 15 கிராம்
கோஷ்டம் – 15 கிராம்
சந்தனம் – 15 கிராம்
செண்பகப்பூ  – 15 கிராம்
கொத்தமல்லி – 15 கிராம்
விலாமிச்சம் வேர் – 15 கிராம்
நெல்லி வற்றல் – 15 கிராம்
ஏலக்காய் – 10 கிராம்
சீரகம் – 10 கிராம்
கொன்றைப்பிசின் – 10 கிராம்
உருத்திராட்சம் – 15 கிராம்
பருத்திக்காய் சாறு – 1/4 லிட்டர்
பொன்னாங்கண்ணி சாறு – 1/4 லிட்டர்
பசு நெய் – 3/4 லிட்டர்

மூலிகைகளை உலர்த்தி பொடி செய்து சாறுகளுடன் நெய் கலந்து, சிறு தீயில் காய்ச்சி வடித்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் கொடுத்து வர குணமாகும்.

Show Buttons
Hide Buttons