போர்டோமிக்சர் நோய் தடுப்பு

தேவையான பொருட்கள் :
1.வேம்பு கொட்டை -1 கிலோ
2.கிளிஞ்சல் சுண்ணாம்பு -400 கிராம்

செய்முறை :
வேம்பு கொட்டையை நன்றாக தூள் செய்து 5 லிட்டர் தண்ணீர் கலந்து 12 மணி நேரம் ஊறவைக்கவும் ,ஊற வைத்து வடிகட்டிய சாற்றுடன் 400 கிராம் கிளிஞ்சல் சேர்த்து 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும் .பின் வடிகட்டி பயன்படுத்தலாம் .

பயன்படுத்தும் முறை :
300 மில்லி கலவைவுடன் 10 லிட்டர் நீர் சேர்த்து கை தெளிப்பான் கொண்டு பயிர் நன்கு நனையுமாறு தெளிக்கவும் .

நெல் நாற்று அழுகல் நோய் ,அஸ்வினி ,இலைபேன் ,இலைசுருட்டு புழு மற்றும் குலை நோய் கட்டுப்படும் .

 

Show Buttons
Hide Buttons