பிரண்டை துவையல்

தேவையானப்பொருட்கள்:

பிரண்டை – 1 கட்டு(பிரண்டை கொடி வகையாகும்.இதில் நுனித் தண்டு மட்டும் எடுத்துக் கொள்ளவும். மற்ற தண்டு எல்லாம் முற்றலாக இருக்கும்.)
சின்ன வெங்காயம் -10
பச்சை மிளகாய் -4
காய்ந்தமிளகாய் -2
உப்பு -சிறிதளவு
புளி -சிறிதளவு

தாளிக்க:

எண்ணெய் -1 டேபிள் ஸ்பூன்
கடுகு -தலா 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு -தலா 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை:

1.முதலில் பிரண்டை கட்டில் நுனித் தண்டை மட்டும் ஆய்ந்து எடுத்துக் கொண்டு சுத்தம் செய்து நீரில் அலசி எடுத்து பொடியாக நறுக்கி தனியே வைத்துக் கொள்ளவும்.
2.சின்ன வெங்காயத்தை தோல் உரித்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து 3.சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், வர மிளகாய் போட்டு வதக்கவும். பின் பிரண்டையை போட்டு சுருள வதக்கவும். பின் உப்பு, புளி சேர்த்து வதக்கி கீழே இறக்கி ஆற விட்டு நைஸாக அரைத்தெடுக்கவும்.
உப்பு சரி பார்த்துக் கொள்ளவும்.
4.சுவையான பிரண்டை துவையல் ரெடி. இதை இட்லி, தோசை, சூடான சாதம், தயிர் சாதம் எல்லாவற்றிற்கும் பொருத்தமான சைட்-டிஷ்.
5.இதை சீசன் கிடைக்கும் போது பயன்படுத்திக் கொள்ளுங்கள். அத்தனை மருத்துவ சக்தி வாய்ந்த கீரை இது. பித்தம், பசியின்மை, எல்லாவற்றிற்கும் செலவே இல்லாத மருந்து இது. ஒரு முறை சாப்பிட்டு பார்த்தால் இதன் சுவையே மறுபடியும் சாப்பிட தூண்டும்.

Show Buttons
Hide Buttons