காராமணி இனிப்பு சுண்டல்

தேவையானப் பொருட்கள்:

காராமணி பயறு – 1 கப்
வெல்லம் பொடி செய்தது – 1 கப்
ஏலக்காய்த்தூள் = ஒரு சிட்டிகை
உப்பு – ஒரு சிட்டிகை
தேன் – 1 டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்)

செய்முறை:

1.காராமணிப் பயிறை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். குழையவிடக்கூடாது. சுண்டலுக்கு வேக வைப்பதுபோல் வேகவைத்து, தண்ணீரை வடித்து விடவும்.
2.ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீரை விட்டு, அதில் வெல்லத்தூளைப் போட்டு கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து ஒரு கொதி வந்ததும், அதை வேறொரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய வெல்லத்தை அடுப்பிலேற்றி கம்பி பாகு வரும் வரை காய்ச்சவும். பின்னர் அதில் வெந்த காராமணியைச் சேர்த்து கிளறி விடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து காராமணியும் வெல்லமும் ஒன்றாகச் சேரும் வரை கிளறி ஆற விடவும்.
3.ஏலக்காய்த்தூள், தேன் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

Show Buttons
Hide Buttons