சீந்தில் கொடி, கொத்தமல்லி, சீரகம் இம்மொன்றையும் சம அளவாக எடுத்து பொடி செய்து 1/4 லிட்டர் தண்ணீருடன் பாத்திரத்தில் இட்டு கலக்கி பாத்திரத்தின் வாயை மெல்லிய துணியால் மூடி திறந்த வெளியில் வைக்கவும், இரவு முழுவதும் வைத்து காலை எடுத்து வடிகட்டிய தண்ணீருடன் சிறிதளவு கற்கண்டை இடித்துக் கலக்கவும்.1 டம்ளர் அளவு தினமும் இரு வேளை காலை, மாலை அருந்தி வந்தால் மயக்கம், தலை சுற்றல் குணமாகும்.