Last Updated:
August 27, 2015

Click here to submit your article
Posts tagged "வில்வம் (Bealtree)"

சகலவித காய்ச்சலும் குணமாக

கோரைக்கிழங்கு, சீந்தில் கொடி, வில்வப்பூ, வெட்டி வேர், விலாமிச்சை வேர், நிலவேம்பு,சுக்கு ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் அளவு எடுத்து நன்கு இடித்து பொடியாக்கவும். அரை லிட்டர் தண்ணீர் விட்டு எட்டில் ஒரு பங்காக சுண்டக்காய்ச்சி வேளைக்கு 1 அவுன்சு வீதம் தினமும் இரு வேளை அருந்தி வர அனைத்து வித காய்ச்சலும் குணமாகும்.  →
Views : 223

தொடர்ந்து உருவாகும் பேதி அகல

10 கிராம் மாதுளம்பூ மொட்டு, மாதுளம் பழ ஓடு, வில்வப்பழத்தின் சதை , குடசப்பாலை, ஆவாரம் பூ, முத்தக்காசு, அதிவிடயம், பீநாரிப்பட்டை இவைகளை வகைக்கு 10 கிராம் அளவு எடுத்துக் கொண்டு கஷாயமாக்கி 1 அவுன்சு வீதம் தினமும் இருவேளை அருந்தி வந்தால் தொடர்ந்து உருவாகும் பேதி அகலும்.  →
Views : 169

உள்காய்ச்சல் குணமாக

வேப்பம்பூவையும், வில்வம்பூவையும் கைப்பிடி அளவு நெய்யில் வதக்கவும். அதை அம்மியில் வைத்து சிறிதளவு தேன் விட்டு நன்றாக மைபோல் அரைத்து அரைத்த விழுதை கொட்டைப்பாக்களவு உருண்டைகளாக செய்து வேளைக்கு ஒரு உருண்டை வீதம் தினமும் இரு வேளை காலை, மாலை உண்டுவர 3 நாட்களில் உள்காயச்சல் குணமாகும்.  →
Views : 307

மலேரியா குணமாக

வில்வம்பூவையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சாறெடுத்து அதனுடன் சிறிதளவு தேனையும் கலந்து தினம் இருவேளை அருந்தி வந்தால் கடுமையான காய்ச்சல், மலேரியா குணமாகும்.  →
Views : 459

வாதக்காய்ச்சல் குணமாக

வில்வ இலைகளை நீர்விட்டுக் காய்ச்சி அந்த நீரைக் குடித்து வந்தால் வாதக்காய்ச்சல் குணமாகும்.  →
Views : 169

ஆஸ்துமா குணமாக

வில்வஇலையுடன் மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோய் குணமாகும்.  →
Views : 621

பெருங்குடல் புண் ஆற

3 மிளகு இலை, 6 வில்வ இலை இவ்விரண்டு இலைகளையும் பால் விட்டு அரைத்து கலக்கி காலை, மாலை 2 அவுன்சு வீதம் குடித்து வர பெருங்குடல் புண் ஆறும்.  →
Views : 643

திக்கிப் பேசுதல் குணமாக

வில்வ இலையை அதிகாலை வெறும் வயிற்றில் மென்று பால் அருந்தி வந்தால் திக்கிப் stபெருச்தல் குணமாகும்.  →
Views : 433

தாதுவீரியம் பெருக

சீரகபொடி மற்றும் வில்வபட்டை இரண்டையும் பொடியாக்கி நெய்யில் குழப்பி சாப்பிட தாதுவீரியம் பெருகும்.  →
Views : 415

தாது பலப்பட

10 கிராம் வில்வவேர் பட்டையை 1 கிராம் சீரகத்துடன் அரைத்து பாலில் சாப்பிட்டு வர தாது பலப்படும்.  →
Views : 478

Social Media

Show Buttons
Hide Buttons