Last Updated:
May 12, 2020

Click here to submit your article
Posts tagged "பால் (Milk)"

கண்கள் தொடர்பான நோய்கள் அகல

வெண்தாமரை மலரின் இதழ்களை பாத்திரத்தில் போட்டு அதனுடன் 100 மிலி பால் சேர்த்து காய்ச்சவும்.கொதித்து வரும் சமயத்தில் பாத்திரத்தை இறக்கி அதிலிருந்து வரும் புகையை எந்தக்கண் பாதிக்கப்பட்டுள்ளதோ அந்த ஆவி படும்படி பிடிக்கவும். இப்படி தினமும் காலை, மாலை செய்து வர கண்கள் தொடர்பான அனைத்து குறைபாடுகளும் அகலும்.    →
Views : 831

கல்லீரல் நோய்கள் குணமாக

மலைவேம்பு பூ, வேலிப்பருத்தி இலை ஆகியவறை சம அளவு எடுத்து சாறெடுத்து கொதிக்க வைத்த பாலுடன் கலந்து கொள்ளவும். இதை வேளைக்கு இரண்டு தேக்கரண்டி அளவு வீதம் சிறிது நீர் விட்டு கலக்கி அருந்தி வந்தால் இருதய நோய் அணுகாது, கல்லீரல் தொடர்பான நோய்கள் அனைத்தும் குணமாகும்.  →
Views : 976

வெள்ளை வெட்டை நோய் குணமாக

அன்றாடம் அதிகாலையில் ஒரு கைப்பிடி அளவு ஓரிதழ் தாமரை மலர்களையும், இலையையும் பறித்து தண்ணீரில் கழுவி வாயிலிட்டு மென்று 200 மிலி பாலை அருந்தவும்.தொடர்ந்து 10 நாட்கள் உண்டுவர வெள்ளை வெட்டை நோய் குணமாகும்.  →
Views : 1191

குழந்தையின் உடல் நிறம் பிரகாசமடைய

பெண்கள் கர்ப்பமாயிருக்கும் போது குங்குமப் பூவை பாலில் கலந்து தொடர்ந்து அருந்திவர பிறக்கும் குழந்தையின் நிறம் பொன்னிறமாகவும் பிரகாசமாகவும் இருக்கும்.  →
Views : 1358

மூட்டுவலி குணமாக

அரிசிமாவுடன் ஊமத்தை இலையை சமமாக எடுத்து நன்றாக மைபோல் அரைக்கவும். அரைத்த விழுதுடன் சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்யோ சேர்த்து களிப்பு பதத்தில் பூசி வந்தால் மூட்டுவலி, வீக்கம், வெளிமூலம், நரம்பு சிலந்தி, பால் பெருக்கால் உருவாகும் வலி, கட்டிகள் முதலியவை குணமாகும்.  →
Views : 895

ஆண்மை அதிகரிக்க

உலர்ந்த செம்பருத்தி பூவின் மகரந்தத்தை இடித்து பொடியாக்கி தினமும் 2 வேளை ஒரு தேக்கரண்டி அளவு பாலில் கலந்து குடித்து வர உடல் புஷ்டியாகி ஆண்மை அதிகரிக்கும்.  →
Views : 1009

சீதபேதி குணமாக

மாம்பூ, மாதுளம்பூ, மாந்தளிர் இலை மூன்றையும் வகைக்கு 5 கிராம் அளவு எடுத்து சிறிது நீர் விட்டு அம்மியில் மை போல் அரைத்து அரைத்த கலவையுடன் பாலைக் கலந்து அருந்தி வர சீதபேதி குணமாகும்.  →
Views : 701

முடி நன்றாக செழித்து வளர

மாங்கொட்டையின் உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து பால் விட்டு நன்றாக அரைத்து அரைத்த் விழுதை தலை முழுவதும் தடவி ஊறவைத்து பின்னர் ஒரு மணி நேரம் கழித்து குளிக்கவும்.  →
Views : 1704

கண் தொடர்பான நோய்கள் குணமாக

பச்சை கற்பூரத்தையும், மாதுளம்பூவையும் சம அளவு எடுத்து இடித்து அதன் சாற்றை தாய்ப்பாலில் கலந்து கண்களில் பிழிந்து விட கண் தொடர்பான நோய்கள் குணமாகும்.  →
Views : 991

சிறுநீரக கோளாறுகள் குணமாக

10 கிராம் ஓரிதழ் தாமரை மலரையும், ஓரிதழ் தாமரை இலைக் கொழுந்தையும் சம அளவு எடுத்து அம்மியில் வைத்து மைபோல் அரைத்து அரைத்தக் கலவையை 200 மிலி காய்ச்சிய பாலில் கலந்து அதிகாலை மட்டும் 1 டம்ளர் அளவு அருந்தி வந்தால் சிறுநீர் தொடர்பான பிணிகள் அகலும்.  →
Views : 381

Social Media

Show Buttons
Hide Buttons
ta Tamil
X