Last Updated:
May 12, 2020

Click here to submit your article
புண்
Per Page :

புண்கள் ஆறிட

கடுக்காயை தண்ணீர் விட்டு சந்தனக்கல்லில் இழைக்கவும். இதனுடன் மலை வேம்பின் சாற்றையும் சம அளவு கலந்து தடவி வர உடலிலுள்ள புண்கள் ஆறும்.  →
0 Views : 931

சிலந்திபுண்கள் குணமாக

நாயுருவி செடியின் இலையையும், மலை வேம்பின் பூவையும் சம அளவு எடுத்து இடித்து சாறேடுக்கவும்.இச்சாற்றை துணியில் நனைத்து சிலந்தி கடித்த புண்கள் மீது போட்டு வர குணமாகும்.  →
1 Views : 574

சிலந்திப்புண் குணமாக

மலைவேம்பு பூவையும் வேலிப்பருத்தி இலையையும் சம அளவு எடுத்து இடித்து சாறெடுத்து மெல்லிய துணியில் நனைத்து சிலந்திபுண் மீது போட்டுவர குணமாகும்.  →
0 Views : 593

மேகப்புண்கள் குணமாக

மலைவேம்பு பூ, பொடுதலை இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து சிறிது மஞ்சளையும் சேர்த்து அம்மியில் மை போல் அரைத்து மேகப்புண்களின் மேல் தடவி வந்தால் குணமாகும்.  →
0 Views : 561

மர்ம உறுப்புகளில் உள்ள புண் ஆற

குங்குமப்பூவை தேன் விட்டு அரைத்து போட்டு வந்தால் மர்ம உறுப்புகளில் காணப்படும் புண்கள் எளிதில் ஆறிவிடும்.  →
1 Views : 795

வயிற்றுப்புண் குணமாக

அம்மான் பச்சரிசி இலையுடன் பருப்பு மற்றும் நெய் சேர்த்து பொரியல் செய்து சாதத்துடன் உண்டு வந்தால் வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் குணமாகும்.  →
0 Views : 846

சேற்றுப்புண் குணமாக

மஞ்சள் துண்டை தண்ணீர் விட்டு அம்மியில் மை போல் அரைத்து அரைத்து விழுதுடன் சுண்ணாம்பையும் சேர்த்து போட்டால் சேற்றுப்புண் குணமாகும்.  →
0 Views : 668

புரையோடிய புண்கள் ஆற

அத்திப்பாலை தடவி வந்தால் புரையோடிய புண்கள் ஆறும்.  →
0 Views : 472

செருப்புக்கடி புண் குணமாக

தென்னை ஓலையை எரித்து சாம்பலாக்கி தேங்காய் எண்ணெயில் குழப்பி செருப்புக்கடி புண்மீது தடவி வர செருப்புக்கடி புண் குணமாகும்.  →
0 Views : 525

நாக்குப்புண் குணமாக

அகத்திஇலையை அலசி தண்ணீரில் அவித்து அந்த நீரை மூன்று வேளை தினமும் அருந்தி வந்தால் நாக்கிலுள்ள புண்கள் ஆறும்.  →
1 Views : 606

Social Media

Show Buttons
Hide Buttons
ta Tamil
X