Last Updated:
May 12, 2020

Click here to submit your article
சருமம்
Per Page :

சரும பாதுகாப்பிற்கு

எலுமிச்சம்பழச்சாற்றை அடிக்கடி ஏதாவது ஒரு விகிதத்தில் உள்ளுக்குள் சாப்பிட்டு வந்தாலோ அல்லது உடம்பில் பூசி குளித்து வந்தாலும் சருமத்திற்கு பாதுகாப்பு சாதனமாக இருக்கும்.  →
0 Views : 613

பளபளப்பான சருமத்துக்கு

சருமம் பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க கிரீம்கள், தைலங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் உட்கொள்ளும் உணவு வகைகளை சீரமைத்துக் கொள்வதன் மூலமே சிறப்பான சரும எழிலை பெற முடியும்.முக்கியமாக வெங்காயம், தக்காளி, பெருங்காயம் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக்கொண்டால் சரும எழில் மேம்பாட்டுக்கு பேருதவியாக இருக்கும்.  →
1 Views : 899

சரும நோய்கள் வராமலிருக்க

வெந்நீரில் சிறிதளவி உப்பு போட்டு குளித்தால் சரும நோய்கள் ஏதும் ஏற்படாது. சரும நோய்கள் இருந்தாலும் அகன்று விடும்.  →
0 Views : 642

சருமம் மென்மையாக இருக்க

வாரத்திற்கு இருமுறை உடல் முழுவதும் பாதாம் எண்ணெயைத் தடவி வைத்திருந்து பிறகு கடலை மாவு தேய்த்து குளித்து வந்தால் சருமம் மென்மையாகவும் பளபளப்புடன் திகழும். கொஞ்சம் கொஞ்சமாக பாதாம் எண்ணெய்யை உடல் முழுவதும் தடவி நன்றாக உடம்பைத் தேய்த்து ‘ பாலிஷ் ‘ செய்தாலும் சரும சுருக்கம் ஏற்படாது.  →
0 Views : 630

சருமம் பட்டுப் போல் இருக்க

அன்றாடம் குளிக்கும் போது சோறு வடித்த கஞ்சியில் சுத்தமான அரப்பு தூளைப் போட்டு உடம்பில் தேய்த்து குளித்தால் சருமம் பட்டுப் போல் மென்மையாக இருக்கும்.  →
0 Views : 685

சரும மென்மைக்கு

சருமத்திற்கு சோப்பை உபயோகிக்காமல் அதற்கு பதிலாக ஒரு ஸ்நானப் பவுடரை தயார் செய்து உபயோகிக்கலாம். பச்சைப்பயறு மாவுடன் சலித்த மென்மையான கோதுமைத் தவிட்டை கலந்து அந்தத் தூளைக் கொண்டு உடம்பை தேய்த்து குளிக்கலாம்.  →
0 Views : 741

சரும பாதுகாப்பிற்கு

வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளித்தால் சருமம் பட்டுப் போன்று மிருதுவாக இருக்கும். மேலும் சரும நோய்கள் ஏற்படாது.  →
0 Views : 609

சருமம் எழில் பெருக

காலையில் குளிப்பதற்கு முன்னால் எழுமிச்சைச்சாற்றை உடலில் சேர்த்து பத்து நிமிடம் கழித்து குளித்து வரலாம். அல்லது எலுமிச்சம் பழத்தின் தோல்களை வெந்நீரில் போட்டு குளிக்கலாம். காலையில் ஒரு டம்ளர் வெந்நீரில் ஓர் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து அதை தொடர்ந்து அருந்தி வந்தாலும் சருமம் எழில் பெருகும்.  →
0 Views : 634

Social Media

Show Buttons
Hide Buttons